என் விதி காதலில்
யுகங்கள் கன யுகங்கள்
அவள் கடந்திடும் நிமிடங்கள்
என்னை காணும் போதெல்லாம்
நெஞ்சினில் கால் தடங்கள்
கவிஞன் மனம் கொண்டு
அவளை தினம் ரசிப்பேன்
பார்வை பட மறந்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்
வெள்ளை மௌனங்கள்
அவள் ஒர பார்வைகள்
பார்க்க மறந்து போகையில்
கண்ணில் வேர்வைகள்
விடிவதும் முடிவதுமாய்
நாளின் கோர்வைகள்
அவளை காணாது மூடாது என் இமைகள் ...........