வாழ்க்கை ஒரு வட்டம்
மரம்பழுத்த கனிவாசம் தோட்டம் நிறையும்
வாசம்ஈர்க்க பறவைகளும் அங்கே விரையும்
பழம்தின்ற பட்சிக்கு கும்பி குளிரும்
தினம்வந்து விருந்துண்டு பசியும் ஆறும் !
விரைவாக தின்றவிதை எச்சத்தில் வெளியேறும்
நிலம்புதைந்த வித்ததுவும் மண்முட்டி முளைக்கும்
விருட்சமாக வளர்ந்ததும் காய்த்துக் கனியும்
விரும்பிவரும் புள்ளினத்தை கிளையாட்டி வரவேற்கும் !
இயற்கையின் சுழற்சி அற்புத நிகழ்வு
இறைவனின் படைப்பில் எல்லாமே வியப்பு
வாழ்க்கையும் வட்டம்தான் உணர்ந்தால் சிறப்பு
இயற்கையோடு இணைந்துவாழ வராது தாழ்வு !!