வா நண்பா வா

வா நண்பா! வா நண்பா!
பாதைகள் பல இருக்கு...
பட்டாம்பூச்சி கூட இங்கே
பட்டம் ஆக வழி இருக்கு.
புழுக்கூட போராடுது
புழுதியோடத்தான் வாடுது,
எட்டுத்திக்கும் வீசும் காற்று
உன்னை விட்டுப்புட்டா வீசுது.

சுத்தும் பூமி சுத்தும்வரை
சூரியனும் தூங்குவதில்லை.
மண்ணில் பொறந்த மாணிக்கம் நீ,
மங்கிப்போனா நியாயம் இல்லை.
போராடும் பூமியில
பொட்டி கட்ட பாக்காதே,
பட்டா போடு ஒரு இடத்தை
பிறர் தொட்டு பார்க்க விடாதே.

பாதையுல முள் இருந்தா
பக்குவமா பாத்துபோடா.
பார்ப்பதெல்லாம் முல்லா இருந்தா
உன் மனச நீயும் மாத்திக்கோடா.
எட்டிப்புடி எட்டும்வரை
எதற்கு இந்த கட்டாந்தரை?
தேவை இல்லை ஏனிப்படி,
சொந்த கான்கள் உண்டு தாவிப்புடி.

நாயும் நரியும் பொறந்த பூமியில்
நீயும் போரந்திருக்கிற.
வேறுபாடு வேண்டும்முன்னா
வெத்து ஆளாய் வளராத.
கட்டுப்பாடு கொஞ்சம் போடு
நிமிர்திடுவாய் வெற்றியோடு.
தட்டுப்பாடு ஏதுமில்லை
தாராளமாய் போராடு.

வேஷங்கட்டும் வித்துவான்கள்
வந்துப்போக இருந்திடுமே,
உன் விவேகத்தை வேடிக்கைபார்த்து
வெற்றிதான் காத்திடுமே...
தோற்றுப்போன கதைகளை கொண்டு
தோரணங்கள் கட்டிவிடு
தோய்வின்றி நீ தேய்ந்திட
வெற்றியின் கதவு தானாய் திறந்திடுமே.

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (17-Nov-13, 4:15 pm)
சேர்த்தது : Raj Kumar
Tanglish : vaa nanbaa vaa
பார்வை : 96

மேலே