கண் எனும் ஓடையில் வெண் துளிகள் வழியுதடி

நின் பார்வையில் குளித்து
வெண் மணல்
என் உடல்
நிமிர்ந்து வளராமல்
பிறர் முகம் நோக்கி
தினம் அவர் கால் பற்றி நாளும் ...

நின் கரம் பற்றி
நிலா முற்றம் கண்டு
உலா வரவேண்டிய
திருவிழா நொடிகளில்
தெருவோரம்
ஒரு ஓரம்
வெறும் நிலா கண்டு நாளும்....

நின் நிழல் தேடியணைத்து
நித்திரையுலகம்
நிம்மதியாய்
பயணிக்க வேண்டிய
நிமிடங்களில்
நீல வானம் வெறித்து
நடுநிசிக் கோழிகளின்
சோக ராகம் கேட்டு நாளும்.....

கண் எனும் ஓடையில்
வெண் துளிகள்
வழியுதடி....

என் குரல்
நித்தம் கேட்டு
என் உலகம்
படைக்க
என் கடவுள்
நீ இங்கு இல்லை....

பெண் கடவுள் நீ
எமன் சதியில்
மண் விட்டுப்
போனாயா இல்லை
இந்த வெறும்
பிள்ளையின்
கண் பட்டுப்
போனாயா??

எத்தனை பேர்
ஏங்கியிருப்பார்கள்
ஏழைத்தாய் உன்
எழில் வயிற்றில்
பிறக்க....
எமனுக்கும்
பொறமை போல்
ஏற்காமல்
அழைத்துவிட்டான்
என் நிலைமை
எண்ணாமல் உனை....

அம்மா!!!!
எமன் சதி
எங்கழைத்தாலும்
எழுபிறப்பிலும் உன்
எழில் வயிற்றில் நானே
பிறப்பேன்.

அடுத்த பிறவியிலாவது
அன்னை நீ
அல்லி மலர்ப் பிள்ளையெனை
அனாதையாக விடாமல்
அனுதினமும் என்னோடு இருக்க
அரக்கன் எமன் உலகத்திற்கு
அனுப்புகிறேன் ஒரு மடல்
சென்றடையாது எனத்தெரிந்தும்
செலவழித்து நாளும் ...

எழுதியவர் : நஞ்சப்பன் (17-Nov-13, 3:13 pm)
பார்வை : 93

மேலே