நதி

என் இடத்தை நீ பிடித்தாய்
எச்சரித்தேன் மழையின் மூலம்
அரசியல்வாதியின் அரவணைப்பில் மண் நிரப்பினாய்
மீண்டும் எச்சரித்தேன் வெள்ளப்பெருக்கு மூலம்
லஞ்சம் கொடுத்து பட்டா வாங்கி சொந்தம் என்றாய்
புயல் ஆனேன் பெருக்கெடுத்தேன் வெள்ளமாய்
மீண்டும் பிடித்தேன் என் இடத்தை
(உத்ராஞ்சல் நிலைமை எங்கும் ஏற்படலாம்)

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (17-Nov-13, 3:25 pm)
Tanglish : nathi
பார்வை : 104

மேலே