கனவொன்று கண்டேன்

கனவொன்று கண்டேன்!
பேரின்பம் கொண்டேன்!
கற்பனை பொங்கும்
இனிய கவிதைபோல!
கவித்துவம் ததும்பும்
அற்புத சொற்சிற்பம்போல!
கனவது கண்டேன்! - இன்பக்
கனவது கண்டேன்!

புவியெங்கும் மரங்கள் அடர்ந்தது!
காற்றில் ஆக்சிஜன் நிறைந்தது!
ஓசோனில் ஓட்டை அடைந்தது!
பூக்களின்வாசம் காற்றிலெங்கும் கலந்தது!
சுவாசத்தில் புத்துணர்ச்சி நிறைந்தது!
சிட்டுக்குருவிகள் சிறகடித்துத் திரிந்தது!
கனவது கண்டேன்! - இன்பக்
கனவது கண்டேன்!

தமிழமுத மழலைச்சொல் கேட்டேன்!
தமிழ்பேசும் மகளீர்கள் பார்த்தேன்!
தமிழாகதிரைப்பாடல் ஒலிக்கக் கேட்டேன்!
தன்மானத் தமிழினம் பார்த்தேன்!
தேனானதமிழ் குடும்பங்களில் கேட்டேன்!
தமிழர்கள் ஒன்றினைதல் பார்த்தேன்!
கனவது கண்டேன்! - இன்பக்
கனவது கண்டேன்!

மனங்களில் அன்பு பெருகியது!
உலகில் மனிதம் நிறைந்து!
வீடுகளில் சந்தோஷம் மிகுந்தது!
நாடுகளில் நட்பு சிறந்தது!
வாழ்வில் சொர்க்கம் மலர்ந்தது!
புவியில் அமைதி பரவியது!
கனவது கண்டேன்! - இன்பக்
கனவது கண்டேன்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (18-Nov-13, 7:55 am)
பார்வை : 305

மேலே