உருகும் மெழுகும் கருகும் திரியும்
உருகி மெழுகு உதவுகிறது.
கருகித்திரி எரிகிறது.
புரியாதா வெளிச்சமதை
இருவருமே பெற்றாரென்று?
புரிந்திருந்தால் வெளிச்சமும்-அவை
கரைந்து உருக்குலைந்ததும்-நன்றி
மறந்தும் ஓடுமோ!
வேருதான் வளர்த்ததென்றும்
விவரம் மலர் அறியாதா?
பூத்ததும் மறக்குமோ!
வளர்த்தாரைத் துறக்குமோ!
வண்டினைக் கண்டதும்
வேர் மறந்தும் விரிக்குமோ!
பிரசவிக்கும் வலியதை
புருசனுக்கும் ஒளிப்பாளே!
பிள்ளையைக் கண்டதும்
வலியெல்லாம் மறப்பாளே!
வலியின்றிப் பெருமைகள்
வாய்க்குமோ தாய்மைக்கு!
வலியதனைச் சிலைசொன்னால்
உளியதனைச்செதுக்குமோ!-அழகு
கலைச் சிலையாக மிளிருமோ!
கதைக்கும் அலை மீண்டும்தான்
முனையுமா?
தோற்கும் நிலை தேறவும்தான்
துணியுமா?
கரையதனைத் தொட்டுத் தொட்டு
சவாலை ஏற்குமே!
வளர வளர விசையைக்கூட்டி
கரையையேத் தாவுமே!
எழுத்துமட்டும் கோர்த்துவிட்டால்
வரிகளாகுமா?
வரிகள் வெறும் வரிசையானால்
கவிதையாகுமா?
பிறக்காத கவிதை என்ன
பேச விழையுமோ!
உருக்கி அது அழுது என்ன
உணர்த்தி விளையுமோ!
அர்த்தமற்றப் படைப்புக்களும்
ஆக்கவில்லையா?
அதையும்கூடத் தமிழ் திருத்தி
ஏற்கவில்லையா?
மனிதனல்லா விலங்குகளைத்
தாங்கும் பூமிக்கோ!
மனிதமற்ற மனிதனென்ன
மகா சுமையோ!
அவ்வப்போது சினமெடுக்கும்
இயற்கைப் பாடமோ!
திருந்த மனிதன் பூமியாடும்
திருவிளை யாட்டோ!
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:
அகன் படைப்பு:-
"முதலும் முடிவும் "
அதற்கானக் கருத்து.