538 படுக்கையை உதறு
எந்தக் குளிரும்
உன்னை நிறுத்த
இடம்கொடுக் காதே தோழா!
எழுந்து நடந்தால்
இலக்குகள் எட்டும்
இரவு விடியுமே தோழா!
தொலைந்தன கிடைக்கும்
தொலைவதைத் தடுக்கும்
தொடரும் முயற்சியே தோழா!
உலர்ந்த புற்களில்
ஒன்றும் நிற்காது
உறக்கம் விட்டெழு தோழா!
சிலிர்க்க நிற்குமப்
புற்கள் உன்னையும்
சீண்டி அனுப்புதே தோழா!
பலிக்கும் கனவுகள்
படுக்கையை உதறு !
பாதை தூரமாம் தோழா!