கவிதை காபி

குளித்து முடித்த கூந்தலும்
கார் குழலில் சூடிய மல்லிகையும்
வட்ட முகத்திலிட்ட திலகமும்
நேர்த்தியாகக் கட்டிய புடவையும்

பெண்ணே என் முன்னாலே
உனைப் புதுமையாகக் காட்டுதடி
தினம் எண்ணிப் பார்க்கையிலே
மனம் மல்லிகையாய்ப் பூக்குதடி

ஆவமுது தான் சேர்த்து
சரியாக நீர் சேர்த்து
காபி பொடியது கலந்து
தேனமுதாய் சர்க்கரை கலந்து

நீ கலந்த காபி வாசம்
அதில் தெரியுதடி உன் நேசம்
உன் வரவு தனின் பாசம்
என் நாசியதில் சுவாசம்

என்னங்க என அழைத்து
பாலுடனே சந்தனமதுக் குழைத்து
பெண் வடிவம் தானெடுத்து
பொன் புன்னகையதைத் தொடுத்து

அன்புடன் தந்த காபியது சுத்தம்
அதை அருந்தும் போது வரும் சத்தம்
அருந்திய பின் நீ தரும் சூடான முத்தம்
அது வேணுமடி எனக்கு நித்தம்


.....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (18-Nov-13, 9:28 am)
Tanglish : kavithai kaapi
பார்வை : 1392

மேலே