துறவு------அஹமது அலி--
துறவரம்
எப்படி முறையாகும்
எங்ஙனம் அது அறமாகும்?
*)))
கடமையை
ஏற்பது அறமா?
துறப்பது அறமா?
*)))
இயற்கை வகுத்தளித்த
இல்லறத்தை வாழாமல் நீங்குதல்
மரபா?
*)))
மரபை மீறுதல்
மதிப்பிற்குரிய செயலா?
*)))
துறவரம் அறமென்று
அத்தனை பேரும்
துறவு பூண்டால்
உறவுகளேது?
நீயும் நானும் ஏது?
*)))
ஒரு துறவிச் சிங்கம்
ஒரு துறவிப் புலி
ஒரு துறவி ஆடு
ஒரு துறவி மாடு
எங்கேனும் உண்டா?
*)))
பறவைகளிலும்
இவ்வாறு பார்த்தவருண்டா?
*)))
சோடி சோடியாகவே
படைக்கப் பட்டுள்ளது உயிரினம்
எதற்காக
சிந்திக்க வேண்டாமா?
*)))
துன்பம் என்பது
தேர்வு
தேர்ச்சி பெறுவது
வாழ்வு
தேர்வை புறக்கணித்து
வாழ்வைத் தேடுவதும்
ஓர் அறமா?
*)))
வானுக்கும் பூமிக்குமிடையே
எந்தவொன்றையும்
வீணாகப் படைக்கவில்லை
அவ்வாறே
உச்சி முதல் பாதம் வரையிலும்
அன்றியும்
இல்லறம் துய்க்காமல்
துறவு பேணுவது
அறியாமையே!
*)))
உலகப் பற்றை
முற்றும் துறந்தவர்க்கு
உயிரும் சுமையே!
*)))
தீயவை துற!
அறியாமை துற!
துன்பத்தை துறத்தி
இன்ப வாழ்வை வசப்படுத்து
அதுவே அறம்!
*)))
துறவு அறமல்ல....!
உறவே அறம் ....!
அதில் இல்லறமே
நல்லறம்!!!!!