தனிமை

வீட்டை வெளிச்சத்தால் நிரப்பினேன் ...!
வீரத்தை மெருகேற்றி கொண்டேன் ..!
திரை சீலையை நேர்த்தியாக இழுத்து விட்டேன்..!
தீ ப்பெட்டியை அருகில் எடுத்து வைத்து கொண்டேன்!
கைபேசியை கையில் வைத்துக்கொண்டேன் ..!
கண்களில் தூக்கத்தை எரித்து விட்டேன் ..!
வாசல் கதவை பல முறை பூட்டினேன் ..!
காலடி ஓசை வருகிறதா என்று அப்போ அப்போ
எட்டி பார்த்தேன்,!,,
விடியும் வரை காத்திருந்தேன் ..!
விடிந்த பின்னும் விழித்திருக்கேன் ..!
தெரிந்தவர் வீதியில் பேசினாலும் ..
தெரியதவர் போல வாழ்கிறேன்..!
நாட்களை எண்ணுகிறேன் ..!
நம்பிக்கையுடன்வாழ்கிறேன்..!
வெளியூர் சென்று இருக்கும் என் புருசா ..!
இப்புலம்பலோ பாசத்தினால் பாதி ...
பயத்தினால் மீதி....!

எழுதியவர் : MAJAFA (18-Nov-13, 2:54 pm)
சேர்த்தது : majafa
Tanglish : thanimai
பார்வை : 80

மேலே