மழைக்காலம்

தவளைகளின் கீச்சிடும் கத்தல்
தண்ணீரில் தாவி செல்லும் சத்தம்
மழைக்காலமாக
மகிழ்ச்சியாக

சிறுவர்களின் சில்மிசங்களாக
சிங்கார விளையாட்டுக்கள்
பரிட்சையமாக
படகு விளையாட்டுக்கள்

ஆதவனை காணவில்லை
ஆடைகுவியல்களாக சேர்ந்தன
அசுத்தமடைந்த ஆடைகள்
ஆதவன் இன்றி தவித்தன – உலர்வதற்கு

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
வடிகான்கள் மேலெழுந்தன
குடைகள் பணிக்கு
குஷியில் பள்ளி மாணவமணிகள்

வானம் அழுதது
வாழ்வாதாரங்களும் அழுதது – கூடவே
வீதிகளிலும் நீர்
வீட்டுக்குள்ளும் நீர்

எழுதியவர் : வசீம் அக்ரம் (18-Nov-13, 2:24 pm)
பார்வை : 80

மேலே