நிழல் மட்டும்

அந்தி வெயில் நேரத்திலே
அயர்ந்து நான் நிற்கையிலே

என் நிழலோடு
தன் நிழலை சேர்த்தவளே
பார்த்த கணத்திலே
பறித்து விட்டாயடி என் மனதை

கண்ணாடி நெஞ்சிலே
கல் எறிந்து சென்றவளே

கண் இமைக்கும் நேரத்திலே
காணாமல் போனவளே

நீ எங்கேயடி ?

நிஜம் நீ எங்கேயோ
உன் நிழல் மட்டும் இங்கேயே

எழுதியவர் : prethy (18-Nov-13, 6:10 pm)
சேர்த்தது : prethy
Tanglish : nizhal mattum
பார்வை : 69

மேலே