தேடல்
தேடல்.....
வானம்
பார்த்த
பூமியாய்
விரிசல் பட்டுக்கிடக்கின்ற
காற்றுள்ள ஈரத்தையே உண்டு
துளிர்விடும்
கருவேல மரங்கள்.....
அடர்ந்து
கிடக்கின்ற
கரிசல் காட்டு பூமியில்...
எதற்கெடுத்தாலும்
வேல்கம்பும்
அரிவாளும்
தூக்குகின்ற
கூட்டத்தில்.........
அடுத்தவர்
கஷ்டம் கேட்டால்
உருகி
உதவி செய்யும் பண்பாட்டில்......
வக்காலி மனுஷனுக்கு
வாக்கு தண்டா முக்கியம்
தாயளி சோத்தவிட
மானம் தாண்டா பெருசு ..........
என்று என்னை
வளர்த்த
என்
அருக்காணி தாத்தா
என்னிடமில்லை.....
பெண்ணில் மட்டும்
தாய்மை
சுரக்கும் என்ற
கூற்றை உடைத்த
ஆண்மகனே........
சுருக்கம் விழுந்த
அந்த முகத்தில்
அன்பும் கம்பீரமும்
அணுஅணுவாய்
அத்துணை அழகு......
திருவிழா கூட்டத்தில்
தோள்மீது அமரவைத்து ....
தூக்கி செல்லும்
தாத்தாக்களை பார்த்தால்
என் ஈர விழிகள்....
உன்னை தேடுகின்றன.....!