வறுமையின் கொடுமை

விழித்திருப்பதுபோல்
பகல் பொழுது
உறங்கிக்கிடப்பதுபோல்
ஊரின் நிலப்பரப்பு

உணவுக்கு தவிப்பதுபோல்
ஒரு பிஞ்சு
முடிவுக்குக் காத்திருப்பதுபோல்
ஒரு பருந்து

சோத்துக்கு ஏங்குதோ
இந்த உயிர்?
சோகத்தைத் தாங்காது
வேதனையில் சரியுதோ?

பசி தீர, மண்ணைதொட்டு
வணங்குதோ?-இல்லை
மண்ணோடு உறவாட
வரம் வேண்டுதோ?

நாத்துபோல நிமிர்ந்து
நிற்கும் வயசில
நாதியத்துக் கிடக்குதம்மா
உதவி ஏதுமில்லாம.

கோடை வெய்யில்போல்
கொதிக்குதம்மா என் நெஞ்சம்
வடியாத வெள்ளம்போல்
விழியெல்லாம் நீரம்மா.

உன்னை மறப்பதற்கு
என்னால முடியாது-நான்
செத்து மடிந்தாத்தான்
மறப்பதற்கு மாத்து வழி

எழுதியவர் : கோ.கணபதி (19-Nov-13, 6:31 am)
பார்வை : 110

மேலே