பெண் கொடுமை

அந்த சந்திரனும் காணோம்
இந்திரனும் காணோம்
வானத்தையும் காணோம்
மேகத்தையும் காணோம்

பெண்கள் இல்ல உலகம்
இப்படிதான் இருந்திடுமோ
பெண்ணை மனதில் மதித்தால்
அவை மீண்டும் வந்திடுமோ

ஆணை படைத்த இறைவன்
துணையாக பெண்ணை படைத்தான்
பெண்ணை படைத்த இறைவன்
கூட கொடுமையையும் படைதான்

ஏன் இந்த அவலம்
பெண்ணுக்கே அதிகம்
உயிரையும் பறிக்கும்
பரிதாபம் தினமும்

கல்லறைக்கும் உள்ளே
பெண்ணுக்கு கஷ்ட்டம்
அது ஏனோ

பெண் என்றும் தலைகுனிய வேண்டாம்
என்றும் தடுமாறவும் வேண்டாம்
பெண்ணுக்கு மதிப்பு
அவள் ஒழுக்கத்தில் இருக்கு

வாலிபத்தின் வயசு
பண்ணுதுங்க கிருசு
உயிரோடு விளையாட
தூண்டுதுங்க வயசு

ஆன் அதிகாரமும் வேண்டாம்
உயிரை கொடுமை செய்ய வேண்டாம்
ஆணுக்கு மதிப்பு
என்றும் பெண்ணிடத்தில் இருக்கு

விளையாட்டாய் தவறு
செய்தாலும் குற்றம்
மீண்டும் நீ செய்தால்
பெண் உடம்பில்
உயிர் இல்லை நித்தம்

எழுதியவர் : kalaiselvi (19-Nov-13, 11:23 am)
Tanglish : pen kodumai
பார்வை : 559

மேலே