kanaakkalin kavithaikkaari naan
கனாக்களின்
கவிதைக்காரி நான் ............
கருமையில் ஒரு சொட்டு
ஒளித் துளியிலும்
கனவு காண்பவள் நான்
என்
கனவுகள்
கருமையிலும் ஒளிப்பிழம்பு
கண்ட
கனவுகளை
கட்டி வைத்தேன்
கண்ணுக்குள்ளே
கண்கள் திறக்க முன்னே
கனவினிலும் தனிமையில் .......
கலைந்தபோதும் தனிமையில் ......
இனிமேலும்
இது போதும்
கணவனில் வாழ்ந்த எனக்கு
இப்போது
கனவுகளே பிடிப்பதில்லை
தூங்கவும் நோக்கம் இல்லை
தூரப் போ கனவே
தூங்க வேண்டும் எனக்கும் ..........

