நிலவைத் திருடி

நான் ,
இன்னும் பாடுவது இரவில் தான் ,
விண்ணும் ஓய்ந்து இருளை போர்த்தும்
இரவில் தான் ......
மண்ணும் வெந்து வாடி உறங்கும்
இருளில் தான் ......
கண்ணும் மூட கட்டிடும் இமைகளை
இரவில் தான் ......
அந்த ,
இரவில் தான் .....
ஈருளில் பயந்து நிலவைத் திருடி
கருப்பு கூரைக்குள் ஒழித்து வைத்தேன்
இருண்ட கூரை
திறந்தது கண்ணை .....
திறக்க எண்ணிய கதவைக் கூட
உரக்கச் சாத்தி வைத்தேன்
உள்ளிய யாரும் வந்து பார்த்தால்
உலகின் சந்திரன் என்னிடம் என்று ?
கனவு கூட காணவில்லை
காலை மாலை வந்தாலும்
கண் மூடித் தூங்கவில்லை
கதிரவன் பட்டு வியர்க்காமல்
காற்று விசிறி காத்திருந்தியன் ...........
கடும்பனி களைய வெய்யில் வீச
கருமை மாற என் கூரை
நிலவு கசிந்தது பனித்துளி பல
கோடி
நிலமும் கரைந்தது பதிந்த இரத்தம்
மூடி
என் கண்கள் கரைந்தன கரையும் நிலவைக்
கரைக்கும்
கொடும் கதிரானை சாடி ..............