ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்

ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்

ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்...

சென்ற மாதம் மணம் முடித்து
இந்த மாதம் செல்கின்றேன்..

பிரிவதர்க்கு மனமும் இல்லை,
மறப்பதற்கு வழியும் இல்லை.

கற்பு கொண்ட என்னவளின்
கண்களில் ஏனோ நீரின் தொல்லை..

வடக்கு நோக்கி செல்கின்றேன்,
வந்திடுவேன் உனை காக்க..

வருவதற்கு நட்களானால்
வருத்தம் நீயும் கொள்ளாதே..

நீ மட்டும் அழகு என்றேன்,
நின்னை மட்டும் என்னில் கொண்டேன்...
என்னை உன்னில் தந்து சென்று
நம்மில் ஒன்றாய் வந்து சேர்வேன்..

ஒரு வேளை வரும்பாதை மறந்து விட்டால்,
நம்மகனை அனுப்பிவிடு.
இறப்பதற்கு பயமும் இல்லை,
இறந்தாலும் மகன் வருவான்..

கலங்காதே கண்மணியே,
கடல் போல கண்ணீர் ஏனோ.

கம்பீரம் கொண்டனுப்பு...

தந்தைக்கும் தாய்க்கும் உன்னை
தம்மகளாய் தந்து செல்ல,
எம்மிடத்தில் நீ இருந்து
எம் பணியை செய்துவைப்பாய்...

எனக்காக சிரிக்காவிடினும்
உனக்காக சிரிக்கின்றேன்...

சிவக்க வேண்டாம் உன் கண்ணும்
தவிக்க வேண்டாம் உன் மனமும்.

பச்சைக்கொடி காட்டி அனுப்பு,
பாசத்தால் நானும் செல்வேன்.


முனைவர் நந்தகோபால் ராஜா
வரைப்பட உதவி. மைலாஞ்சி

எழுதியவர் : முனைவர் நந்தகோபால் இராஜா (19-Nov-13, 5:36 pm)
பார்வை : 174

மேலே