என்னை அனதை என்றார்கள்

படைத்தவனையும் பார்த்ததில்லை !!!!
பெற்றவளையும் பார்த்ததில்லை !!!!
என்னை அனதை என்றார்கள்
அன்பு காட்ட எவரும் இல்லை !!!!
ஆதரிப்பவர் எவரும் இல்லை !!!!
உன்ன உணவு இல்லை !!!!
இருக்க இடமும் இல்லை !!!!
நான் மழையில் நனைந்தாலும்
கரைந்து போகமாட்டேன் !!!!
நான் வெயிலில் வதங்கினாலும்
கருகி விடமாட்டேன் !!!!
என் வெற்றிக்கு துணை
நிற்ப்பவர் எவரும் இல்லை
எள்ளி நகையாடுபவர்கள் ஏராளம் !!!!
நான் விழும் போது
தூக்க எவரும் இல்லை
என்னை ஏசுபவர்கள் ஏராளம் !!!!
நான் பசியால் வாடினாலும்
என் தன்மானம் வாடுவது இல்லை !!!!
நான் வீதியில் கிடந்தாலும்
என் விதி என்று குருவதுமில்லை !!!!
நான் விழ்வதும்
மீண்டும் எழுவதும்
பிறர்க்கு வேடிக்கையாக இருக்கலாம் !!!!
நான் விழ்வது
மீண்டும் எழுவேன்
என்ற நம்பிக்கையில் தான்
நான் நிச்சயம் ஒரு நாள் வெல்வேன் !!!!
அன்று !!!!
என்னை ஏசியவர்கள்
எனக்கு துதிபாடுவர்கள் !!!
என்னை அனதை என்றார்கள்
என்னை தன் சொந்தம் என்று
மார்தட்டிக் உவகை கொள்வர் !!!!