மகனே உனக்காக

தெத்தித் ததும்பி
நீ பேசும்
மொழி கண்டு
துள்ளித்தெரித்து
ரசிக்கிறது
தாய் (தமிழ் )மொழி .....

குழையும்
உன் கன்னங்களில்
குவிந்து கிடக்குது
கோடி மலர்கள் ....

நவரசம் காட்டும்
உன் திருமுகத்தை
பழரசம் போல் அள்ளிப்
பருக ஆசை ....

மிளிரும் உன்
சிரிப்பை காண
'மிமிக்ரி '
செய்ய
தூண்டுகிறாய் .....

'வக் வக் 'என நீ
சிரிக்கையில்
'பக் பக் ' என
தாய்மனம்
தவிக்குது
பிறர் கண்
படுமோ என்று ...

உதடு பிதுக்கி நீ
வெதும்பும் வேளையில்
அடடா ! அதை ரசிக்க
ஆயிரம் கண்
போதாது ....

முத்தமிழும் போதவில்லை ...
செந்தமிழை தூற்றவில்லை ....
வருணிக்க வார்த்தையில்லை ....
வேறேதும் தோன்றவில்லை ...
உன் அன்பை விட
அழகு ஏதுமில்லை ....

எழுதியவர் : சங்கீதா செந்தில் (20-Nov-13, 1:19 pm)
Tanglish : makanae unakaaga
பார்வை : 422

மேலே