நான் எங்கே

அக்கிரமம் கண்டால்
கண்ட துண்டமாக வெட்ட
துடிக்கும் நான் .

அநீதி நடந்தால்
குரல் எழுப்ப
கொதிக்கும் நான் .

ஆக்ரோஷம் நேர்ந்தால்
தடுதது நிறுத்த
நினைக்கும் நான்


அமைதி வேண்டும்
நிம்மதி அடைய
தேடும் நான்

இவ்வுலகில் வாழ
தகுதிஇல்லாதவள்
என்று கருதிகிறேன்..

கொடுமை கோலெடுத்து ஆட
பணம் தலை விரித்து ஆட
மற்றெல்லாம் பதுங்க


உலகம் எங்கு செல்கிறது?
அழிவை நோக்கி
ஆபத்தை நோக்கி

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (20-Nov-13, 10:33 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : naan engae
பார்வை : 365

மேலே