முள்ளிவாய்க்கால்

அழிவது தமிழ் மட்டும் அல்ல தமிழனும் தான்..

எம்நாட்டிலாவது உயிர்போன சரித்திரத்தை, ஊன்று கோளிட்டு பலரின் துணைகொண்டு படைத்து பார்த்தான் ஒரு முதுதமிழன்... ஒரு வாரம் பொறுக்காமல் உடைத்தெறிந்த மந்திரக்காரனும், தந்திரக்காரியும், தன்னல தலைவனும் தலைவிரித்தாடும் உக்கிர போக்கை கண்டு உள்ளத்தில் உதிரம் கொதித்தோடி பயனும் என்ன..
முற்றத்தை உடைத்து முத்தமிழை முடமாக்க முயன்று நின்றவனை தோள்கொண்டு கொண்டு தாங்கி, மூடனாய் போன தனிழனை குற்றருரைத்து பயன் என்ன...
மா நஞ்சை, நாவில்கழந்து தேனாக பேசிபவனை இனம்காண தமிழனை கண்டு பயன் என்ன...
விழியோரம் நீர்வந்தும், மொழியோடு நாம் நின்றும் மொத்தத்தில் பயன் என்ன...? எதிரிடம் கையேந்தும் நிலை கண்டு தலை நாணி பயன் என்ன....? சாதி கொண்டு பிரித்து கண்களை குருடாக்கிய காமுகனை மாமுகனாய் நினைதோடும் இளங்கன்றை கண்டும் பயன் என்ன...

தமிழன் சிந்திக்க மறந்துவிட்டான்.. அவன் சிந்திக்க மறந்ததால் சிதைந்து கொண்டு இருப்பது தமிழ் மட்டும் அல்ல.... தமிழனும் தான்...
தமிழுடன் முனைவர் நந்தகோபால் இராசா...

எழுதியவர் : தமிழுடன் முனைவர் நந்தகோப (19-Nov-13, 8:19 pm)
பார்வை : 165

மேலே