சதுரங்கம்-9
தனது கைகள் கட்டப்படவில்லை என்பதை உணர்ந்தாள் உஷா ,,,
அந்த தடியர்களும் போதையில் மல்லாந்து கிடந்தனர்,,,
இது தான் தப்பிக்க சரியான நேரம் என முடிவு செய்தாள் உஷா
மெல்ல கையிலிருந்த கட்டுகளை முழுவதுமாக கழற்றினாள்,,, பின் கால் கட்டுகளை அவிழ்த்தாள்,, வாயிலிருந்த துணியை எடுத்தாள்,,,
மூச்சை பிடித்துக் கொண்டு பூனை நடைப் போட்டாள்,,, போதையில் இருந்த ஒருவன் திரும்பி படுக்க சற்றே நிதானித்தாள்,,,,,,,,,,
அந்த மங்கலான ஒளியில் மெல்ல நடந்து படிக்கட்டிற்கு வந்தாள்,,,,,,, பின் அந்த இருளில் வேகம்,,,,,,,,,,,,, வேகம்,,,,,,,,,, வேகம் மட்டும் தான் அவளிடம்
"அவர்கள் உன்னை கண்டுபிடிப்பதற்குள் நீ இந்த இடம் விட்டு செல்ல வேண்டும்.... வேகமாக போ "- மூளை கட்டளை இட்டது
வேக நடையில் அவளின் அடி வயிறு வலித்தது,,
வேக நடை ,,,,,,,,,,,,,,,,,,
"ஹே எங்கடா போயிருப்பா,,,,,,,, அவல பிடிக்கலனா நம்ம உயிர் போய்டும் போங்கடா போய் தேடுங்க டா போங்க"- தொலைவில் உஷாவை அவர்கள் தேடினர்
கடவுளே அவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாது ,,,,,,,, வேண்டுதலோடு வேக நடை,,,,,,,,
தென்னை மரக்கீற்று அசைந்தது,,,, நான் இருப்பது தென்னந்தோப்பா,,, இங்கிருந்து எந்த பக்கம் செல்ல
சற்று குழம்பினாள்
வலது புறம் எதோ மினுமினுக்கவே அந்த திசை நோக்கி ஓடினாள்,,,,,,
"ஹே அதோ போற அங்கே தெரியுது பாருங்க வாங்கடா,,,, வேகமா,,,,,,, டேய் மாணிக்கம் அவளை புடி விட்டுடாத,,,,,,,,"
அவர்களின் கூக்குரல் , மூச்சை பிடித்துக் கொண்டு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போல சீறி பாய்ந்தாள்,,,,,
அவள் வந்த வேகத்திற்கு ஈடுக்கொடுத்து ஓடி வந்தான் மாணிக்கம்
"கடவுளே பிடிச்சிடுவான் போல இருக்கே" - வேகத்தை அதிகப்படுத்தினாள் உஷா,,,
அவள் உடலிலுள்ள சக்தி அனைத்தையும் அவளின் காலிற்கு கொடுத்தாள்,,,,,
வெளிச்சம் அதிகரித்தது,,,,,, ஒரு வழியாக மெயின் ரோடு வந்தாள், ஆனால் மாணிக்கம் அவளை விடுவதாக இல்லை, துரத்திக் கொண்டே வந்தான்
தோப்பை கடந்து தார் ரோட்டில் ஓடினாள்,,,
"ஹே ஓடாத நில்லு"- கத்தினான் மாணிக்கம்
உஷாவின் ஓட்டம் நிற்பதாக இல்லை
"ஏய் நில்லு இல்லைனா சுட்டுடுவேன்"- மாணிக்கத்தின் கையில் துப்பாக்கி,,,,,,,
உஷா எதற்கும் நிற்பதாக இல்லை
"டூமீல்,,,,,,,,,, டூமீல்,,,,,,,, டூமீல்,,,,,,,,,,,"
சுட்டான் மாணிக்கம்,,,,,,,,,,,,,,,,
"ஆ,,,,,,,,,,,,,,,,,,,"- அலறியபடி தார் ரோட்டில் விழுந்தாள் உஷா
(விளையாடுவோம்,,,,,,,,,,,,,)