மருந்து எது
மருந்து எது..?!
ஆடிடும் அலை
பாடிடும் ஆர்ப்பரிப்பு இசை
கூடிடும் மக்கள்
நாடிடும் ஆழ்கடல் அமைதி....
கோடியும் கொடுத்து
தேடியும் கிடைக்கா
பொறுமையை இழந்து
வெறுமையில் வாடும் பல்லோர்..
மருந்தை உணரார்...
தேடி தேடி சேர்த்த செல்வம்
மீட்டி மீட்டி இசைக்கும் இராகம்
மீட்டுத் தராத மனஅமைதி
ஈட்டித் தரும்
மழலை வாய்மொழி பிதற்றல்...
.... நாகினி