தோளில் சாய்வதும் சுகமே
உள்ளம் கொண்ட சுகம் எங்கும்
இன்பம்மென்று காண்பதென்றால்
துன்பம் வந்த நேரங்களிலும் தோள் சாய துணை நிர்ப்பாயானால் என்னவென்று சொல்வது!
அந்த சுகம் தந்த தோள்களில் மறுபடியும் உறவு கொள்ள ஒரு சகாப்தம் தேவை என்பேன்
இல்லை என்றால் தோள்களில் சாய்ந்து அழ மறுபடியும் ஒரு துன்பத்தை தேடி கொள்வேன்!
தோள் மீது சாய்ந்து கொண்டால் துக்கம் எங்கும் தொலைந்து போகும் இல்லை என்றால் தோள் மீது சாய்ந்து அழ மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தேடி கொள்ளும் இந்த மனது!
எவ்வளவு சுகம் இந்த தோள்களில் ஒருமுறை சங்கதித்து பாருங்கள்!