சின்ன சின்ன ஆசை

வான் வெளியிலே பறவையாக ஆசை
வயல் வெளியிலே தடம் பதிக்க ஆசை
வண்ண மயிலாக தோகை விரிக்க ஆசை
சின்னக் குயிலுடன் போட்டிபோட ஆசை
சிற்றோடையில் சலசலக்க ஆசை
காட்டு வெளியில் மான்களாக ஆசை
ஆசை ஆசை ஆசை !!!
அருவிக்கரையில் கதைபேச ஆசை
கொட்டும் மழையில் ஆட்டம்போட ஆசை
சிறு பிள்ளையாய் குதித்தாட ஆசை
குன்றின் மீதேறி உலகைக்கான ஆசை
கிராமத்து மண்ணின் மனம்நுகர ஆசை
மழைச்சாரல் வந்து எனைச் சீண்ட ஆசை
ஆசை ஆசை ஆசை !!!
இளங்காலை பொழுது கோலமிட ஆசை
ரோடோரக் கடையில் சிற்றுண்டி ஆசை
தங்கையுடனே குட்டி சண்டை ஆசை
தமையனுடனே சிறு கொஞ்சல்/கோபம் ஆசை
நண்பர்களுடன் ஒர் நாள் ஆசை
நட்புடன் எந்நாளும் ஆசை
ஆசை ஆசை ஆசை !!!