இயற்கையே

கவிதையென்று கூறேன் உன்னை
புத்தகத்தில் அடங்கிவிடுவாய்..

கனவு என்று சொல்லேன்
காலையில் முடிந்து விடுவாய்

புன்னகைஎன்று உளறேன்
இதழ்களோடே மடிந்துவிடுவாய்..

பூக்களென்றும் உரையேன்
ஒரேநாளில் வாடிவிடுவாய் ..

இதயமென்றும் சொல்லமாட்டேன்
என்றேனும் மறைந்து விடுவாய் ..

அதனால்
உன்னை
இனிமையான இயற்கையே என்கிறேன்
எந்நாளும் என்னுடன் இருப்பாய் !
பசுமையாக....

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 7:24 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : iyarkaiye
பார்வை : 52

மேலே