மறவாதே

குழந்தையின் வாயில் எச்சில் வடிந்தால்.......
அதை பாசந்த்தொடு துடைத்தார்கள் நம் பெற்றோர்கள்.......

அவர்கள் முதுமையில் குழந்தை போல் வாயில் எச்சில் வடிக்கும் போது .........

மறந்துவிடாதீர்கள் ....

உன்னை பெற்றெடுத்தவர்கள் முதுமையில் குழந்தைகள் ...
பாசத்திற்கு ஏங்குபவர்கள் ....
பரிவை தேடுபவர்கள் ......
பண்பை நினைப்பவர்கள் ...

குழந்தை தாயை தேடுவது போல உன்னை தேடுபவர்கள்....
குழந்தையாய் உன்னிடம் பேசுபவர்கள்...

ஒருகேள்வியை மூன்றுமுறை கேட்க்கிறார்கள் என்று முகத்தை காட்டிவிடாதே ...
குழந்தையில் நீ 100 முறை திரும்ப திரும்ப கேட்ட கேள்வியை முகம் சுழிக்காமல் உனக்கு சொல்லி இருப்பார்கள் மறந்துவிடாதே ....

போகட்டும் என்று விட்டு விடாதே ....
பூமியில் நிம்மதியோடு வாழ்வாய் என நினைத்துவிடதே .......
அந்த நிலை உனக்கும் வரும் மறந்துவிடாதே ...
உன்னை இதயத்தில் தாங்கியவர்களை உயிரோடு எரித்துவிடாதே .....

கண்ணீரில் அவர்கள் இருத்த போதும்
உன் சிரிப்பில் மகிழ்ந்திருப்பார் .....
உன்னை சிற்பமாக வடிக்க
ரத்தம் கொடுத்திருப்பார்......
ராத்திரி பகல் பாராமல் உழைத்திருப்பார் ...
உன் கனவு நினைவாக உறக்கம் மறந்திருப்பார்..

நித்தமும் உன்னை மார்பில் சுமந்தவர்களை....
நித்திரை இல்லாமல் செய்து விடாதே ...
உன் நிழல் கூட பூமியை தொட உனக்கு தகுதி கிடையாதே ....

என்னை படைத்தவர்களே ...
என்னை இந்த உலகிற்கு தந்தவர்களே ...
உங்களுக்காக நான் வாழவேண்டும்...........
எந்த ஜென்மத்திலும் நான் உங்கள் மகனாக பிறக்க வேண்டும்.....

எழுதியவர் : சாமுவேல் (21-Nov-13, 4:00 pm)
Tanglish : maravaathe
பார்வை : 194

புதிய படைப்புகள்

மேலே