மூன்றாம் பதிப்பு

மூன்றாம் பதிப்பு
*****************
டெட்சுகன் என்றொரு ஜென் ஞானி இருந்தார்.அவர் ஜென் சூத்திரங்களை எல்லாம் சீன மொழியிலிருந்து ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கக் கருதி, அதற்கு ஆகும் செலவை சரிக்கட்ட ஜப்பான் முழுவதும் சென்று பலரிடமு நிதி உதவி கேட்டார்.அனைத்துத் தரப்பினரும் உதவி அளித்தனர்.ஆனால் தேவையான பணம் திரட்ட பத்து ஆண்டுகள் ஆயிற்று.மொழி பெயர்ப்பு வேலையை ஆரம்பிக்க இருந்த தருணத்தில் நதி ஒன்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்இழந்துதுன்புற்றனர் .டெட்சுகன் சேர்த்த பணம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
செலவழித்தார்.

மீண்டும் பல ஆண்டுகள் மொழி பெயர்ப்புக்காக நிதி திரட்டினார்.இரண்டாம் முறை வேலை ஆரம்பிக்கும்போது நாடெங்கும் கொள்ளை நோய் பரவி ஏராளமான மக்கள் துன்புற்றதால் மறுபடியும் சேர்த்த பணம் எல்லாவற்றையும் அந்த மக்களுக்காக செலவழித்தார்.

பின்னரும் அவர் மனம் தளர்வடையாமல் மொழி பெயர்ப்பு வேலைகளுக்காக பணம் திரட்ட ஆரம்பித்தார்.சுமார் இருபது ஆண்டுகள் பணம் திரட்டி தான் நினைத்தபடி அனைத்துஜென் சூத்திரங்களையும் மொழி பெயர்த்து முடித்து விட்டார்.முதல் பிரதியை அவர் ஒரு மடாலயத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார்.அதனைப் பார்வையிட்ட ஜென் துறவிகள்,''உண்மையில் இது டெட்சுகன் வெளியிட்ட மூன்றாவது பதிப்பாகும்.இதைவிட நாம் கண்ணால் பார்க்க முடியாத முதல் இரண்டு பதிப்புகளும் மிக அற்புதமானவை,''என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

நன்றி இருவர் உள்ளம் தளம்

எழுதியவர் : ஜென் கதை (21-Nov-13, 3:58 pm)
Tanglish : moonraam pathippu
பார்வை : 73

மேலே