தண்டனை

மகனே ,

நம் வருங்கால நலன்
கருதி
குழந்தையாய் இருந்த
உன்னை தினமும்
குழந்தைகள் காப்பகத்தில்
விட்டேன்.

என் ஒரு வருமானத்தில்
உன்னை நல்ல நிலைக்கு
வளர்த்து ஆளாக்கினேன்.

என் லட்சியம் நிறைவேறியது
மனமகிழ்ந்தேன்.

நீயும் உன் லட்சியத்தில்
வென்று விட்டாய் என்று
சொன்னாய்.

பூரித்து நின்றேன்,
ஆனந்தத்தில் கண்கள்
குளமாயின.

இந்த தள்ளாத வயதில்
என்னை முதியோர் காப்பகத்தில்
சேர்த்து விடப் போவதாக
சொன்னாய்.

இப்பவும் என் கண்கள்
குளமாயின.

உன் வளர்ச்சியில் நான்
ஒரு தடைக் கல்லாக
இருப்பதாக நீ நினைத்ததால்.

ஆண்டவனின் கணக்கு
எப்பொழுதும் சரிதான்
என்பதை பரிபூரணமாக
இப்பொழுது உணர்கிறேன்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (21-Nov-13, 7:52 pm)
Tanglish : thandanai
பார்வை : 83

மேலே