உனக்கு எப்போது விடுதலை
கண்டேன் சீதையை
கண்டேன் அவள் கோலத்தை
கண்டேன் அவள் வி ர்க்தியை
கண்டேன் அவள் ஏக்கத்தை.
கண்டேன் அவளின் எழிலை.
துவண்டு இருந்தாள்
துணிவில்லாமல் இருந்தாள்
துணி போல் இருந்தாள்
துனபறு தப்பட்டிருந்தாள்
துடித்து போயிருந்தாள் .
பெண்ணிற்கு வரக் கூடாத துன்பம்
பெண்மையை சோதித்த கொடுமை
பெண்ணினத்தை அவமானப்படுத்திய விதம்
பெண்கள் தலை குனிய வைத்த உண்மை
பெண்ணே உனக்கு எப்போது விடுதலை ?
கம்பன் காலம் முதல் பெண் ஓர் அடிமை
இன்றும் அவள் ஓர் அபலை
எப்போதும் அவள் ஒரு சுமை தாங்கி
கண்ணீரும் கவலையும் அவளுக்கு சொந்தம்
தாங்கி தாங்கி அவள் நொந்து போகிறாள்

