சாகா வரம்பெறு
பெற்றவர் பிணைப்பில் பிறந்த மனிதா
பிறவி பயணம் தொடர்ந்தாய் மனிதா
சதைகொண்ட உடல்மட்டும் சருகாய் போகட்டும்
சாகா வரத்தை உன்பெயரோ அடையட்டும் ...........
மனித பிறப்பு மகத்துவம் நிறைந்தது
மரணம் என்னும் முடிவை கொண்டது
அங்கம் அழுகி மறைந்து போகலாம்
உன்ஆன்மா மட்டுமாவது உலகில் வாழட்டும் ........
செய்த செயல்களால் சிறப்பிடம் பெறுவாய்
மனித மனங்களில் நிலையாய் இருப்பாய்
தீய செயல்களை அறவே மறுத்திடு
நல்ல செயல்களை இன்றே தொடங்கிடு .........
கெடுத்து வாழ்வதில் ஆனந்தம் இல்லை
கொடுத்து வாழ்ந்துவா துன்பமும் இல்லை
மனித தத்துவம் புரிந்து வாழ்ந்திடு
நல்மனம் சொல்லும் பாதையில் சரியாய்நடந்திடு .
அன்பால் நிறையும் மனங்கள் எல்லாம்
ஆண்டவன் வாழும் இல்லமே ஆகும்
கோவில் வாழும் தெய்வங்கள் எல்லாம்
நல்குனம் கொண்டோரின் இல்லத்தில் இருக்கும் ..
விட்டு கொடுப்பவன் கெட்டதும் இல்லை
வேதனை அவனை தொடுவதும் இல்லை
நிம்மதி அவனில் நிலையாய் இருக்கும்
நீண்ட புகழோ அவனை உயர்த்தும் ............
சத்தியம் மட்டுமே கொள்கையாய் கொள்வாய்
சாகும் வரையிலும் நீதியை மதிப்பாய்
மற்றவர் உணர்வை உயிர்போல் மதித்து
மானுட வாழ்வை இன்பமாய் கடப்பாய் .........
ஆசை கொடுக்கும் அவஸ்தையை விடுத்து
மனித மனம்கொல்லும் பணத்தை மறந்து
வெறுப்புகளால் தோன்றும் வழக்கை தடுத்து
விவேக மனிதனாய் நீயும் மாறிடு ...........
தறிகெட்டு அலையும் மனிதனின் மத்தியில்
நெறிகொண்டு வாழ்ந்து உச்சம் அடைவாய்
மகத்துவம் நிறைந்த செயல்கள் செய்து
மக்கள் மனங்களில் மறையாமல் இருப்பாய் .......