தாயான மனைவிகளுக்கு மட்டுமே புரியும்

எனக்கான கவனிப்பையும்
எனக்கான நேரத்தையும்
உன்னிடம் முழுவதுமாய்
பங்கிட்டுக் கொள்ளும்
நேரம் மட்டுமே ,
பொறாமை வருகிறது ,சிறிது ,
நம் மகனிடம் ....

"பார்த்து அவனை கீழ
போட்டுறாதீங்க..."
என்று நம் மகனுக்காய்
தைரியமாய்
உன் வீட்டு ஆட்களிடம்
பரிந்து பேசும்போது ,
"சரியான ஆளு ...
நமக்குன்னா
ஒரு நாளாவது,
பேசி இருப்பாரா "
என மனதிற்குள் திட்டிக் கொண்டு
பற்களை கடித்தாலும் ,
நீ பார்த்தவுடன்
வந்துவிடுகிறது அந்த
இன்ஸ்டன்ட் சிரிப்பு !

எழுதியவர் : வெற்றிமகள் (22-Nov-13, 4:38 pm)
பார்வை : 138

மேலே