நான் ஒரு தமிழனடா
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வள்ளு வனுக்கு இரண்டடி சாத்தியம்
ஈற்றடியில் கொண்டு வந்தான்
உலகின் சிறப்பை வானின் உயர்வை
உழவனின் வாழ்வை,மழையின் பலனை
மண்ணின் வாசனையை மனிதனின் குணத்தை
வல்லவனுக்கு வல்லவன் வள்ளுவன்.
உலக மறைப் புலவன் வள்ளுவன்
சுருங்கக் கூறி அகலப் புரிய வைத்தான்
திருக்குறள் சிறு சிறு அத்தியாயங்கள்
பத்து குற ட் பாக்கள் பத்து பொருளைக் கூற
நூற்றி முப்பத்தி மூன்றும் நெறியை தூக்கி நிறுத்த
வள்ளுவன் நிலை பிற ழா த வாழ்விற்கு
இலக்கணம் வகுக்கிறான் எளிமையாக.
தமிழில் எது இல்லை என்று நான் நினைக்க
இல்லாதது ஏதும் இல்லை என்று மனம் கூவ
இலக்கிய சுகமா நாடக நயமா
இலக்கண தெளிவா கவிதை தெள்ளமுதா
வழிபாட்டு பாடல்களா இதி காசக் காவியங்களா
எதற்குப் பஞ்சம் எதற்குமே இல்லை என்று எண்ணி
தலை நிமிர்ந்து நடக்கிறேன் தமிழன் என்ற பெருமையோடு