கற்ப்பிப்போர்களே
இறந்து கொண்டிருக்கும்
இலங்கைத்தமிழர் ஷ்நேகிதத்துக்கும்
நசுங்கி கசங்கிய
டெல்லி காகிதத்துக்கும்
சாக்குமூட்டை பரிமாற்றத்துக்கும்
சரக்குக்கடை திறப்புக்கும்
மணம் முடியாமலேயே
ஊட்டி ப்யூட்டியாவதற்கும்
ஊருக்கு விளம்பரப்படுத்தி
பேருக்கு தத்தெடுப்பதற்கும்
பேட்டியில் எதுகை
மோனை வசனத்துக்கும்
வெரசு வெரசாய்
வெள்ளைமாளிகை ஜொலிப்புக்கும்.....
இப்படி அடுக்கிக்கொண்டே
போகலாம் படிக்கட்டமைக்கும்
நீங்களும் காரணம்
என்பதற்குச் சான்றாய் !!!