ஒரு குயிலின் குரல்—பக்தி மாலை
அண்டம் முதலோன் ஆகாய வினையவன்
ஆளும் பகவனைத் தேடு-தண்டம்
கற்றதன் பயனது வென்னவோ சொல்வமோ!
பெற்றது போற்றா அறிவு.
உம்மில் உளதாம் இறையை உணர்ந்தும்
துணியும் நலன்கள் பெறுக!—நம்மில்
உயிர்களெல் லாந்தன்னிற் கொண்டா னவனையே
தம்மில் நினைந்துமே தேடு.
தீவினைப் பயன்களும் தீண்டா துனையே
தனையே இறையெனப் பாடு—நோவினைப்
புலன்களாம் ஐந்தும் கடந்தான் அவனையே
போற்றிட வாழ்வாய் நலம்.
ஒப்பிலாத் தேவன டியார்க்கு வறுமை
ஒண்டாப் பிணியதும் ஓடும்—துபபார்
புண்ணியக் கடலாம் அவனடி தொழுவார்.
பெறுவர்.பேறது வீடும்.
தன்னிலை யற்றத் தலையை வணங்காத்
தலையுந் தலையா மாம்?—இந்நிலைப்
பிறவி மேலுந் தொடரா தொழிய
பற்றுக இறையவன் தாள்.
கொ,பெ.பி.அய்யா.