தமிழ் தேடுகிறேன் என் தமிழ்நாட்டில்

தமிழ்
அன்னைக்கும்
ஆங்கிலம் அவசியம் என்று..

என்
மனதுக்குள்
இப்போது தோன்றுகிறது ..

ஏன் தெரியுமா..?

நான்
தமிழ் பேசுவதற்கு
ஆட்களை தேடும்
அவல நிலைக்கு தள்ளப்பட்டேன் ...

ஆம் ..!

தமிழ்நாட்டின்
தலைநகரில்
அதை அனுபவித்தேன் ...

முகம்
தெரியாத ஒருவரிடம்..
தமிழில் ஒரு
முகவரி கேட்டேன்..

அவர்
ஓ ! அதுவா என்று
ஆரமித்து ...
அனைத்தையும்
ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு
என் முகம்
பார்த்து சிரித்தார் ...

நான்
அவர் முகம்
பார்த்து வெறுத்தேன்..

ஆங்கிலம் எல்லாம்
அவசியம் என்று
கூறுவதில்..
எனக்கு எப்போதும்
உடன்பாடு இல்லை..

அது
தேவையாக
இருக்கட்டும் ..

ஆனால்
அவசியமாக
ஆக்கவேண்டாம் ..

தமிழை
தமிழன் தவிர
வேறு யாரும்
அழிக்கமாட்டான் என்று
வேதனையோடு
முடிக்கிறான் ...!

எழுதியவர் : தமிழ் மகன் (23-Nov-13, 5:51 pm)
பார்வை : 152

மேலே