பொறுப்பில்லா பொருப்பாளர்களே

பிடில் வாசிக்கும்
பிரகஸ்பதிகளே
கேளுங்கள்..

வெட்ட வெளிப்பொட்டலில்
கொட்டுகின்ற மழையில்
பொட்டென்ற சத்தங்கள்...

போச்சே ! போச்சே ! போச்சே !

பூக்கள் நசுங்கியதடா
உதிராத மாலைகள்
உறுவப்பட்டதடா !

உறுப்புக்குள் நுழைந்ததடா
தோட்டாக்கள்...உட்கார்ந்து
உண்ணாவிரதமிருந்து என்ன பயன்?

உன் சுண்டுவிரல் துண்டாக்கப்பட்டால்
உண்ணாவிரதமிருப்பானா உன் தமையன்?

உன் குழந்தை பசியால் அழும்போது
உன் மனைவியின் ஒருபக்கக்கொங்கை
சிதைக்கப்பட்டால் நீ உண்ணாவிரதமிருப்பாயா?

எதற்கடா உண்ணாவிரதம்?

உன் கண்முன் உனதருமைத்தங்கையின்
கற்பு சூரையாடுவதைப்பார்க்கவா?

எதற்கடா உம்மைப்போன்றோர்களுக்கு
அதிகாரப்பதவி நாற்காலி...

எழுதியவர் : (23-Nov-13, 5:06 pm)
பார்வை : 176

மேலே