நான் கண்ட சித்திரம்

நீல வண்ண விரிப்பு,அதன் மீது
திட்டுத் திட்டாக வெள்ளை நிற வளைவுகள்...
இடையிடையே காவி மை
தீட்டப்பட்டிருந்தது..
கொத்து கொத்தாய் கறுப்புப் புள்ளிகள்
காணப்பட்டன...
வரிசை பிசகாமல் நிற்கும் கம்பங்கள்
ஒளி கொடுப்பதை போலத் தெரிந்தது..
நான் கண்ட சித்திரம்..
கதிரவனைத் தொளைத்த வானமும்...
மழை மேகமும்..
பறக்கும் காக்கைக் கூட்டமும்..
சாலை விளக்குகளும் தான்...

எழுதியவர் : buvana (23-Nov-13, 10:24 pm)
பார்வை : 94

மேலே