கார்த்திக்பாரதிக்கு பதில்

23/11/2013 அன்று தம்பி கார்த்திக்பாரதி கேட்ட கேள்விக்கு என் பதில்.
எனக்கு மிகவும் பிடித்த கேள்வி என்பதாலும் என் மனதில் ஆழமாக ஊன்றிய சிந்தனையை வெளிக்காட்ட இந்த வாய்ப்பு தந்தமைக்கும் என் நன்றிகளை தம்பி கார்த்திக்பாரதிக்கு தெரிவிக்கிறேன்.


கேள்வி :
-------------

நம் இந்திய நாடு எதிர்நோக்கியுள்ள மிக பெரிய சவால் என்ன ?
அதில் உங்கள் முன்னுரிமை என்ன ?
இந்தியா மகிழ்ச்சியான வளமான தேசமாக விளங்குவதற்கு நீங்கள் என்ன விதமான பங்கினை ஆற்ற முடியும் ?
====ஆய்வு கட்டுரை போல சொல்ல முடியுமா

கேட்டவர் : karthickbharathi87 -


எனது பதில் :

இந்தியா சந்திக்கும் முதன்மையான பிரச்சினை ஊழல் ஊழல் ஊழல் மட்டுமே.. இந்த ஊழல் என்பதில் அனைத்து விடயங்களும் அடங்கி விடும். சுயநலம், தேசப்பற்று இல்லாமை, ஒழக்கமின்மை என்பன போன்ற அனைத்தும் ஊழல் என்ற வார்த்தையில் அடங்கிவிடும்

இந்தியா வளமான தேசமாக விளங்குவதற்கு வருகின்ற அனைத்து விதமான தேர்தல்களிலும் 49 ஓ க்கு வாக்கு அளிக்க போகிறேன். 49 ஓ என்பது எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு அளிக்க மனமில்லை என்றும் எந்த அரசியல்வாதியும் யோக்கியமில்லை. அரசியல் மாற்றம் வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்திற்கும் இந்த நாட்டிற்கும் தெரிவிக்கும் நமது அதிருப்தி உணர்வு கருவி.
நான் மட்டும் யாருக்கும் வாக்கு இல்லை என்ற 49 ஓ நிலையை எடுத்தால் போதுமா? என்னை சார்ந்த அனைவருக்கும் அரசியல் மாற்றம் தேவை என்பதை உணரவைத்து ஊழல் அற்ற ஒர் சமுதாயத்தை , ஊழல் அற்ற ஒர் ஆட்சியை நிறுவ வைக்க என்னால் முடிந்த காரியங்களை எனது தேச நலன் சார்ந்த பங்காக செய்வேன்.

கிட்டதட்ட நாட்டில் 60 சதவீதத்திற்கு மேல் 49 ஓ என்று யாருக்கும் வாக்கு இல்லை நிலையில் வாக்காளர்கள் ஒட்டளித்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். அதன் பின்பு அரசியல் புனிதமாகுமா ? புனிதமான அரசியல் காரணமாக நல்ல ஆட்சி அமையுமா ? அந்த ஆட்சியால் தமிழர்கள் உடனான அனைத்து மாநிலத்திவரின் ஒற்றுமை ஒங்குமா? இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் தனி ஈழம் அமையுமா ? என்ற கேள்விகளுடன் பதில்களையும் என் மன உண்டியலில் புதைத்து வைத்திருக்கிறேன்.

அதில் சில வெளிபாடுதான் நான் எழுதிய தொடர்கதை (அரசியல்.. அரசியல்வாதி)

எனது மனதில் உள்ளதை வெளிகாட்டிய உனது இந்த கேள்விக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி கார்த்திக் பாரதி !

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (23-Nov-13, 10:59 pm)
பார்வை : 287

சிறந்த கட்டுரைகள்

மேலே