மனதை புண்படுத்தாதே

மலர்கள் என்றும் அழகானது... பிறரின்

மனதை புண்படுத்துவது தவறானது..!

மலைகள் என்றும் உயரமானது...

மற்றவரின் வாழ்க்கையை அழிப்பது தவறானது..!

பழக்கத்தில் நல்லவர்களுடன் பழகுவது சிறப்பாகும்... பிறரை

பழிவாங்கும் எண்ணம் கொள்வது தவறாகும்..!

படிப்பில் போட்டி போட்டு முன்னேறுவது சிறப்பாகும்... மற்றவரின்

படைப்பை அழிக்க நினைப்பது தவறாகும்..!

எழுதியவர் : mukthiyarbasha (24-Nov-13, 9:10 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 366

மேலே