அழகான பலூன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஊதினால் பெரிதாகிறது... பலூன்
உடைந்தால் குழந்தை அழுகிறது..!
உன் மூச்சை நான் பிடிக்கிறேன்... எரிவாயு (Gas) இருந்தால்
உயரத்தில் பறந்து செல்வேன்..!
பிறந்தநாளுக்கு ஜொலிக்கிறேன்...
பிள்ளைகளுக்கு பொம்மையாய் இருக்கிறேன்..!
வண்ண வண்ண பலூனாய் இருக்கிறேன்...
வழியில் கல், குச்சி பட்டால் வெடித்திடுவேன்..!