நான் வேண்டாம் என்று சொல்லியும் என்னை வெளிநாடு அனுப்பிய என் மாமாவுக்கு நான் எழுதிய என் கடிதம்
அன்புள்ள மாமாவுக்கு,
மாமா என் அம்மா, அப்பாவை விட உங்கள் மேல் எனக்கு பாசமும் , மரியாதையையும் அதிகம்..என்னை தேட வேண்டாம், நான் சிங்கபூர் வரமாட்டேன் ,
எனக்கு என்ன வேணும்னு உங்களுக்கு தெரியுமா? இல்லை தெரியாதன்னு எனக்கு தெரியலை. அனால் எனக்கு என்ன வேணும்னு எனக்கு மட்டும் தான் தெரியும், நீங்க கேட்கலாம் என்கிட்டே சொல்லவேண்டியது தானே ? எனக்கு உங்ககிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் இல்லை. நான் இப்ப செய்ற விஷயங்களையெல்லாம் நான் இந்தியா வருவதற்கு முன் யோசிச்சு செய்யவில்லை . நான் பாவாஸ் ஸ்பந்தனா முடிஞ்சதுக்கு அப்புறம் தானாக எனக்குள்ள நிகழ்ற நிகழ்வுகள், (நீங்க அதுக்காக சத்குருவ குறை சொல்ல வேண்டாம் )நான் சத்குரு பெயரை வச்சு தப்பு பண்ணல. நான் உயிரோட கண்டிப்பா இருப்பேன்.( மாமா.நீங்கதானே அடிக்கடி சொல்விங்க தற்கொலை பண்றது கோழை தனம்) எனக்கு எப்போதுமே அப்பா அம்மா கூட இருக்கணும்னு ஆசை தான் மாமா, பக்கத்துக்கு வீட்டுல யாரவது ஒரு சின்ன குழந்தைக்கு சோறு ஊட்டும் போது எனக்கும் நாம் அப்பா அம்மா ஊட்டிவிட மாட்டாங்களான்னு ஆசையா இருக்கும் , மடியில படுத்து தூங்கனும்னு ஆசை,எனக்கு உடம்பு சரியில்லாத போது அவங்க என்ன நல்ல கவனிசிக்கனும்னு ஆசை,இன்னும் இது மாதிரி நிறைய ஆசைகள்,(நீங்க நினைக்கலாம் இதெல்லாம் ஒரு ஆசையான்னு ?) எனக்கு இதெல்லாம் தான் ஆசை, எனக்கு இன்னும் படிக்கணும்னு ஆசையா இருக்கு ஆனால் நீங்க யாருமே என்னை படிக்கவைக்கவில்லை. என் தப்பு தான் படிக்கும் போது நான் ஓடிப்போனது. என் படிப்ப நிருத்தினதுக்கு பிறகு என்னை வேலைக்கு அனுப்பினாங்க.. யாருக்குமே தெரியாத உண்மை மாமா உங்க கிட்ட மட்டும் சொல்றேன் . நான் வேலைக்கு போன இடத்தில என்னை சில நாயிங்க தவறா பயன் படுத்தினாங்க மாமா.(இவ்ளோ நாள் என் மனசுல இருந்த ஒரு உண்மைய உங்ககிட்ட சொல்லிட்டேன் மாமா) நான் வேலைக்கு போன இடத்துல இருந்து வீட்டுக்கு வந்தா என்ன பிரச்சினைன்னு யாரும் இதுவரை கேட்டதில்லை ஆனால் வீட்ல என்ன சொல்லுவாங்க தெரியுமா மாமா ,ஒரு இடத்துல வேலைக்கு போன ஒரு ஆறு மாசம் கூட ஒழுங்கா இருக்குறது இல்லை , அங்கே இருந்து வந்துடுச்சு பரதேசி இப்படியே படுத்துகிட்டு சாப்பிடலாம்னு,இது மாதிரி நிறைய திட்டு வாங்கி இருக்கேன் மாமா ,நான் இவ்ளோ நாள் சிங்கபூர்ல இருந்ததுக்கு காரணம் அம்மா அப்பா ஆசையை நிறைவேததான் , நான் இல்லேன்னா கூட நீங்க எங்கள் நம்ப மாட்டிங்க மாமா , மாமா நீங்க இல்லேன்னா நான் இல்ல மாமா, மாமா நான் உங்க கிட்ட ஆசையா கேட்டது ஒன்னு மட்டும் தான் அது வீடு கட்டணும்னு ,அதுவும் கட்டியாச்சு,
என் ஆசைகள் அனைத்தும் நிறைவேறாமல் போய்விட்டது , எத்தனை கனவுகள் என்னுள்,
சில பேர் அம்மா ,அப்பா இல்லாமல் அனாதையாய்
அனாதை இல்லத்தில்
நானோ எல்லாம்
இருந்தும் அனாதையாய் ,
வெளிநாட்டில்..
நானும் எல்லா இளையரைப்போலத்தான்...எனக்கும் ஆசைகள் நிறையவே இருக்கும் .....
"சந்தோஷம் என்பது எல்லாவற்றிலும் முழுநிறைவு அடைவது என்பதல்ல. அது குறைகளுக்கு அப்பால் சிந்திக்க நினைக்கும் மன உறுதி"
அந்த உறுதி இப்பொழுது என் மனதுக்குள் குடிகொண்டு விட்டது. சிரிப்பு என்பது சந்தோஷம். ஆக, சிரிப்பை தேடி தொடங்கியது என் தேடல். அழுவதற்காக காரணம் தேடுவதை விட்டு சிரிப்பதற்காக காரணம் தேடினேன். "Be possitive, smile" என்று கையடக்க தொலைபேசியின் பின்னணி படத்தில் பொதித்து அடிக்கடி எனக்குள் நானே நினைவூட்டி கொண்டேன். என் வாழ்வில் நான் நினைத்திராத அளவு சந்தோஷமும், சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் இருப்பதை ஓரிரு மாதங்களுக்குள் புரிந்துகொண்டேன்.
எனக்கு உற்சாகம் தரவும், ஆறுதல் சொல்லவும் என்னிலும் விஞ்சியவர்கள் யாருமில்லை என்பதை புரிந்துகொண்டேன். எனக்கு நானே ஆறுதல் சொன்னேன்.
நான் எல்லாவற்றிலும் பூரணமாகவில்லை. ஆனாலும் என் வாழ்வில் நிறையவே சந்தோஷம் இருக்கிறது.
உண்மையான நண்பனிடம் நட்பை ரசிக்கிறேன்.
முகமூடி போட்டுக்கொண்டவனிடம் நடிப்பை ரசிக்கிறேன்.
இலக்குகளுக்கான பாதையில் நடக்கிறேன்.
அடைய முடிந்தால் என் அடைவில் களிப்பேன்.
தடைகள் வருகையில் அனுபவப் பைக்கு உள்ளடக்கம் கிடைத்ததென்று களிப்பேன்.
என்னை துரத்தியடித்த விதியே... உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் துரத்து... நான் மீண்டும் திரும்புவேன் எனக்கே உரித்தான என் இலக்கை... என் வாழ்கையை தேடி...
கண்ணீருடன்.,
ராஜா