பிரிவு

கடல் அலையே!
என் கால்களை
எத்தனை முறை
முத்தமிட்டு இருக்கிறாய்?
அவள்
என்னோடு இருந்த போதெல்லாம்
உன்னை நோக்கி
ஓடிவந்த நான்...
இன்று தனிமையாய்
உலகமே எனக்கு எதிரியாய்...
என்
காதலை அவள் மறந்து போனால் கூட
கவலையில்லை - ஆனால்
என் காதலை
பொய்யாக்கிவிட்டாள்!
அவள் மட்டுமே
உலகம் என்று இருந்தேன்!
எனக்கு
அவள் காட்டியதோ
கல்லைறை!
என்
காதல் பொய்யா என்று
காலத்திடம் கேட்டுவிடன்
காலமும் எனக்கு பதில்பேசாமல்
மௌனமானது....!


எழுதியவர் : ஸ்ரீரங்கம் தமிழ்தாசன் (24-Jan-11, 5:38 pm)
சேர்த்தது : srirangam Tamzhilthasan
Tanglish : pirivu
பார்வை : 447

மேலே