தமிழர்களைக் கொன்றால்தட்டிக் கேட்க நாதி இல்லை

தமிழர்களைக் கொன்றால்தட்டிக் கேட்க நாதி இல்லை
கவிஞர் இரா .இரவி

காக்கை குருவி என சிங்களப்படை
தமிழர்களை நாளும் சுட்டுக் கொல்கிறான்
காக்கை குருவி சுட்டால் கூட இன்று
தண்டனைத் தர உலகளாவிய சங்கங்கள் உள்ளன
தமிழர்களைக் கொன்றால் தட்டிக் கேட்க நாதி இல்லை
தவிக்கிறது தமிழினம் அனாதையாக அவலத்தில்
நேற்று தரங்கபாடி பாண்டியைக் கொன்றனர்
இன்று வேதாரண்யம் ஜெயக்குமாரைக் கொன்றனர்
நாளையும் சிங்களப்படை தமிழரைக் கொல்லும்
நாடு நம் நாடு கோடிகளும் ஆயுதமும் கொடுக்கும்
இறையாண்மை என்று சொல்லியே இன்னும்
எத்தனை நாளைக்கு தமிழர்களை ஏமாற்றுவார்கள்
பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் காட்டும் வீரத்தில்
பாதியாவது இலங்கையிடம் காட்டாதது ஏன்?
தமிழர்களைச் சுடும் இலங்கை ராணுவத்தைத்
தட்டிக் கேட்க இந்திய ராணுவம் சுட்டது உண்டா ?
தமிழ்நாட்டு தமிழன் இந்தியனாகத் தெரியவில்லையா ?
தேசியவாதிகளே இதுதான் உங்கள் தேசியமா ?

எழுதியவர் : eraeravi (24-Jan-11, 6:49 pm)
பார்வை : 465

மேலே