மரணம் ,,,,,,,,,
ஆறடிப்பெட்டிக்குள்
அடைத்துச்செல்கின்றார்கள்
ஆடி அடங்கிய ஒரு மரணத்தினை.
அழுகைகளும், மேளங்களும்,
பிராத்தனைகளும், கேட்கிறது
எழுந்து நன்றி கூற முடியவில்லை.
அநீதிகளுக்கு தூண்களாய் நின்று,
அநாதைகளின் கண்ணீரில்
குளித்து, சொத்துக்கள் சேர்த்த
களைப்பிலே உறங்குகிறது மரணம்.
ஒரு நான் உன்னையும் குளிப்பாட்டி
உறங்கவைப்பார்கள்-
குறையுற்றவர்களை கண்டு
குனிந்து செல்லாதே,
ஊனமுற்ற உள்ளங்களுக்கு
அநீதி உரைக்காதே,
அகம் கொண்டு முகம் பார்
ஆறடி நிலமும் சொர்க்கமாகும்.