இளமை இனித்திட

துளிகள் சேர்ந்து
சில துவாரங்கள் அமைத்து,
வலிகல் இல்லாமல்
வாழ வந்தனவாம்

குழந்தை எனும் கோப்பையிலே,
புன்னகை எனும் பூந்தோட்டத்திலே,
தினம் தினம் தேநீர்
குடித்து வந்தனவாம்.

குழந்தை இன்று குமரன் ஆயாச்சி.
கள்ளம்கபடம் தொலைந்து போயாச்சி.
பருவத்தின் பரிமாற்றம்
பார்ப்பதெல்லாம் அழகாகும்.
ரகசியமாய் பல ராகங்கள்,
சத்தமில்லாமல் உருவாகும்.
முழு நேரம் மூளை
வேலை செய்தாலும்,
முள்வேலி முக்காட்டில்
மூச்சிரைக்க தூண்டிவிடும்.

அரைகுறை ஆட்டம் பல
அடங்காமல் ஆடிவிட.
அத்துவான காட்டுக்குள்ளே,
நீ அறியாமல் போனதென்ன?
பருவத்தின் பந்தாட்டம்
போடவைக்கும் பல வேஷம்.
வேஷமிட்டு வாழ்ந்துவிட்டால்,
பல தோஷம் தோற்றி
தொலைந்து போவாய்.

வாலிபத்தின் வளர்ச்சியிலே,
இரு மனம் உருவாகும்.
ஒரு மனம் வழி விட,
மறு மனம் தடை இட,
குழப்பங்கள் கொடி பிடிக்கும்.
தடையின்றி அலைப்பாயும்
தனித்துவம் உன் வயது,
தடை போட மறுத்தால்,
எதிர்க்காலம், அது கரை சேராது.

ஈரெட்டு பதினாறு
வாழ்க்கையை அறிய மறுத்தால்
நீ வெறும் நாறு.
வண்ணத்து பூசிகள்
வளம் வந்து நின்றாலும்,
வட்டமிட்டு வாழ்ந்துவிடு
வரம்பு மீர தேவையில்லை.

வாழ்க்கையின் அர்த்தங்கள்
வானத்தின் உயர்வளவு ,
தெரிந்திட பாடுபடு
உயர்ந்திடுவாய் வானளவு.
இளமை அது இனிமை என்றாலும்,
இன்பம் அது உச்சம் என்றாலும்,
மூவெட்டில் முடிச்சி போடு.
மகிழ்ந்திடுவாய் முகவரியோடு.

தெளிவெனும் தீயேந்தி,
அறிவெனும் தீபம் ஏற்று,
வெற்றி எனும் வெளிச்சம் பிறக்கும்.
வாழ்நாள் முழுவதும் அதை போற்று.

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (24-Nov-13, 8:55 pm)
Tanglish : inikkum ilamai
பார்வை : 217

மேலே