அவள் இன்னிசை

நான் அவளை கண்டதில்லை
என்றபோதும்,
அவள் எனக்கு என் தாயை விட
பரிட்சயம்,
நிதமும் எனக்கு அவள் ஸ்பரிசம்
தான் புதுபரிசு ;
நான் உன்னுடன் பேச பேச
உனக்கு என்ன புரிந்ததோ ,
அது எனக்கு தெரியாது ,
நான் உன்னை பெற்றும்
உன்னுடன் வாழ வழி தெரியாதவள் ,
உன்னை என் வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் தந்த இறைவன் ஏன்
பாதியில் உன்னை பறித்து சென்றான்
அம்மா என நீ அழைப்பாய் என்று இருந்தேன்
எனை அழவைத்து சென்றாயே..
உன்னை மறக்கும் முயற்சியில்
உன் அம்மா

எழுதியவர் : VENBHAA (25-Nov-13, 1:44 pm)
பார்வை : 71

மேலே