உனக்குள் மோட்சம்

சுடிதார் மாற்றி சேலை கட்ட
சொர்க்கம் பிறக்குது! - நீ
கடித்த கனியைச் சுவைத்த பின்பு
கரும்பு கசக்குது!

இடையை நெளித்து நடக்கும் போது
இதயம் நொறுங்குது! - உன்
நடையைப் பார்த்த எந்தன் கண்கள்
நடுங்கி மயங்குது!

வட்டத் தோசை முகமும் உனக்கு
அழகைக் கொடுக்குது! - நீ
கிட்ட வந்து தொட்டு இழுத்தால்
கிறுக்குப் பிடிக்குது!

உதட்டில் தீட்டும் சிவப்புச் சாயம்
உயிரைப் பிடுங்குது! - உன்
உதட்டைப் பிழிந்த எந்தன் உதடு
உருகி வடியுது!

அன்பே உந்தன் நிழலும் கூட
அழகாய் இருக்குது! - அது
கண்ணைச் சிமிட்டி என்னை
அழைத்து கவிதை படிக்குது!

நெஞ்சைத் தழுவும் முத்து மாலை
நித்தம் மகிழுது! - அது
கொஞ்சிப் பேச என்னை முழுதும்
கொள்ளை அடிக்குது!

மின்னும் வளையல் சத்தம் எழுப்பி
மேளம் இசைக்குது! - உன்
முன்னால் நானும் நிற்கும் போது
மூச்சுத் திணறுது!

முத்த எச்சில் ஈரந் தன்னில்
மோகம் பிறக்குது! - உன்
முத்துப் பற்கள் என்னைத் தீண்ட
மோட்சம் கிடைக்குது!

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (25-Nov-13, 2:20 pm)
சேர்த்தது : KRISHNAN BABU
Tanglish : unakkul mootcham
பார்வை : 53

மேலே